இராவுத்தர்களின் வரலாறுகளும் முக்கிய நிகழ்வுகளும்: 10ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரை.
இராவுத்தர்கள் (Rowthers அல்லது Ravuttars) என்பவர்கள் தமிழ்நாட்டின் உள்நாட்டுப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் பரந்து வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தினர் ஆவர். இவர்கள் பண்டைய தமிழ் இந்து போர் வீரர் இனங்களிலிருந்து இஸ்லாமுக்கு மாறியவர்கள் என்பதும், சோழர் மற்றும் பாண்டியர் அரசுகளில் உயர்ந்த குதிரைப்படை வீரர்களாகச் செயல்பட்டவர்கள் என்பதும் வரலாற்று ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படுகின்றன. இவர்களின் பெயர் "ராஜபுத்ரா" (இளவரசன் அல்லது குதிரை வீரன்) என்பதிலிருந்து உருவானது. இந்தக் கட்டுரை 10ஆம் நூற்றாண்டு முதல் ஒவ்வொரு நூற்றாண்டாக இராவுத்தர்களின் வரலாறு, போர் மரபு, வீரம், வணிகம் மற்றும் ஈகை குணத்தை பற்றி சுருக்கமாக எழுதப்பட்டதாகும். தகவல்கள் வரலாற்று ஆதாரங்கள், கல்வெட்டுகள் மற்றும் சமூக ஆய்வுகளிலிருந்து தொகுக்கப்பட்டவை.
10ஆம் நூற்றாண்டு (900-999 CE)
வரலாற்றில் இராவுத்தர்களின் தோற்றம் இந்நூற்றாண்டில் தொடங்கியது. தமிழ் இந்து போர்வீரர் இனமான ராவுத்தா (Ravutta) குலத்தினர், சூஃபி துறவிகளான நத்தர்ஷா (Nathar Shah அல்லது Nathar Wali, 969-1039 CE) போன்றோரின் செல்வாக்கால் இஸ்லாமுக்கு மாறினர். இது இந்தியாவின் ஆரம்பகால முஸ்லிம் சமூகங்களில் ஒன்று. அதே காலத்தில் துருக்கிய குதிரை வணிகர்கள் (செல்ஜுக் பேரரசு) இவர்கள் பாரசீக, அரபு மற்றும் மத்திய ஆசிய குதிரைகளை இறக்குமதி செய்து தமிழ் அரசுகளுடன் வணிகம் செய்தனர் கூடவே மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, கூத்தநல்லூர், போடக்குடி போன்ற இடங்களில் தங்கி ஹனபி பள்ளியை பின்பற்றி இசுலாமிய பிரச்சாரங்கள் செய்தனர் இதனால் குதிரை படை சார்ந்த சமூகமான இராவுத்தர்கள் பெரும்பான்மையானவர்கள் இசுலாம் சமயத்திற்கு ஈர்க்க பட்டு பின்பற்ற தொடங்கினர். கல்வெட்டுகளும், தமிழ் இலக்கியங்களும் இவர்களையே "ராவுத்தா" அல்லது "ராவுத்தராயன்" எனக் குறிப்பிடுகின்றன. போர் மரபு சோழர் மற்றும் பாண்டியர் அரசுகளின் உயர்ந்த குதிரைப்படை வீரர்களாகச் செயல்பட்டனர். குதிரை வீரர்களின் மரபு இங்கு தொடங்கியது. போர் மரபுகள் மறவர் இனத்துடன் ஒத்திருந்தன. வீரம்போர் வீரர்களாகத் திகழ்ந்த இவர்கள் மதுரை, தஞ்சை, மேற்கு தமிழக பகுதிகள், சில வட பகுதிகளிலும் குறுநில மன்னர்கள் போலவும் சிற்றரசு போலவும் திகழ்ந்தனர். அதிகமாக தமிழகத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் அதிகம் ஈடுபட்டனர். நத்தர்ஷாவின் செல்வாக்கால் அமைதியான மதமாற்றம் நிகழ்ந்தது, இது வீரத்துடன் கலந்த இஸ்லாமிய ஒழுக்கத்தை வெளிப்படுத்தியது. வணிகம் பாரசீக மற்றும் அரபு குதிரைகளை இறக்குமதி செய்து சோழர், பாண்டியர்களுக்கு விற்றனர். துருக்கிய வணிகர்கள் குடியேற்றங்கள் வணிகத்தை விரிவுபடுத்தின. சமூக ஒருங்கிணைப்பில் ஈகை காட்டினர். இஸ்லாமிய போதனைகளால் ஏழைகளுக்கு உதவுதல், தானம் செய்தல் போன்ற குணங்கள் வளர்ந்தன. தமிழ் கலாச்சாரத்துடன் இணைந்து வாழ்ந்தது ஈகையின் அடையாளம்.
11ஆம் நூற்றாண்டு (1000-1099 CE)
வரலாறு நத்தர்ஷாவின் செல்வாக்கால் மதமாற்றம் தீவிரமடைந்தது. இராவுத்தர்கள் சோழர்களின் தாலசோக்ராடிக் (கடல்வழி விரிவாக்க) காலத்தில் துருக்கிய குதிரை வீரர்களாக அழைக்கப்பட்டனர். செக்கிழார் போன்ற கவிஞர்களின் பெரியபுராணத்தில் "துருக்கர்" (துருக்கியர்கள்) குறிப்பிடப்படுகின்றனர். ஓட்டக்கூத்தரின் பிள்ளைத்தமிழ் "துலுக்கர்" எனக் கூறுகிறது. குதிரை வணிகம் தமிழ் அரசர்களால் அழைக்கப்பட்டது. சோழர்களின் குதிரைப்படையில் முக்கியப் பங்கு. போர் மரபுகள் உள்ளூர் தமிழ் வீரர் இனங்களுடன் இணைந்தன. வீரம்குதிரைப்படை வீரர்களாகப் போரிட்டு வீரத்தை வெளிப்படுத்தினர். நத்தர்ஷாவின் போதனைகள் வீரத்துடன் அமைதியை இணைத்தன. குதிரை வணிகம் விரிவடைந்தது. பாரசீக வணிகர்களுடன் இணைந்து துறைமுகங்களில் வியாபாரம் செய்தனர். மதமாற்றத்தின் போது உள்ளூர் மக்களுடன் இணைந்து வாழ்ந்து ஈகை காட்டினர். சூஃபி போதனைகள் தானத்தை ஊக்குவித்தன.
12ஆம் நூற்றாண்டு (1100-1199 CE)
சோழர், பாண்டியர் அரசுகளில் நிர்வாகத்தில் ஈடுபட்டனர். முத்தால் ராவுத்தன் போன்ற புராணக் கதாபாத்திரங்கள் திரௌபதி கோயில் பாதுகாவலர்களாகக் காட்டப்படுகின்றன. திருநெல்வேலி பகுதியில் குடியேற்றங்கள். பாண்டியர் படைகளில் குதிரை வீரர்களாகத் தொடர்ந்தனர். சேர நாட்டில் படையெடுப்புகளில் பங்கு. முத்தால் ராவுத்தன் போன்றோர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைத் தியாகம் செய்து வீரத்தைக் காட்டினர் இதனாலே பிற்காலத்தில் குலதெய்வ வழிபாட்டில் முத்தால் ராவுத்தர் பெயர் இடம்பெற துவங்கியது. குதிரைகள் தானியங்கள் வணிகம். காயல்பட்டினம் போன்ற துறைமுகங்களில் வியாபாரம்.
13 ஆம் நூற்றாண்டு (1200-1299 CE)
டெல்லி சுல்தானக் காலத்தில் வடஇந்திய ரத்தோர் இனங்கள் இஸ்லாமுக்கு மாறினர். மதுரையில் துருக்கிய ஆட்சி (1355 முதல், ஆனால் வேர்கள் இங்கு). கூத்தநல்லூரில் செப்புத் தகடுகள் கல்வெட்டுகள். சோழர், பாண்டியர் படைகளில் தொடர்ந்து பங்கு வகித்தனர். வீரத்தில் சிறந்த இவுளி போர்வீரர்களாக விளங்கினர். குதிரை, வாசனைத் திரவியங்கள் (பரிமள ஜமாத்) வணிகம். சூஃபி துறவிகளால் சமூக உதவிகள் பல செய்தனர்.
14ஆம் நூற்றாண்டு (1300-1399 CE)
பாண்டிய சாம்ராஜ்யம் சகோதர யுத்தத்தால் மறைய துவங்கிய நூற்றாண்டு இது. பாண்டிய மன்னர் சுந்தர பாண்டியனுக்கு ஆதரவாக இராவுத்தர்கள் படைகளின் ஆதரவு இருந்ததாக வரலாறுகள் கூறுகிறது. 1311ஆம் ஆண்டு போரில் இறந்த அதாவுல்லா இராவுத்தர் என்ற பாண்டிய நாட்டு தளபதியின் நடுகல் ரிஷிவந்தியத்தில் கிடைக்கப்பெற்றது. மதுரை துருக்கிய ஆட்சி வீழ்ச்சி (1378), இதனால் இடம்பெயர்வு. விஜயநகரப் பேரரசில் நிர்வாகம், குர்ரம் குண்டா போன்ற இடங்களில் கல்வெட்டுகள். முருகன் கோயில்களுக்கு நிலங்கள் ராவுத்தர்கள் அளித்துள்ளனர். விஜயநகரப் படைகளில் வீரர்கள், அதிகாரிகள். போர் பணிகளில் படைபிரிவாக தொடர்ந்தனர். குதிரை வணிகம் தொடர்ந்தது. ஈகை குணம் நில அர்ப்பணங்கள் ஈகையை வெளிப்படுத்தின.
15ஆம் நூற்றாண்டு (1400-1499 CE)
தமிழகத்தில் பாளையக்கார்கள், தலைவர்களாக உயர்ந்தனர். கேரளாவுக்கு இடம்பெயர்வு (பாலக்காடு, திருச்சூர்). இராவுத்தர்களில் சிலர் சிறிய படைபிரிவாக வடக்கே குடிபெயர்ந்து முகலாய படையில் இணைந்தனர் வடக்கில் ஆவத், ஓத் போன்ற பகுதிகலில் குதிரைப்படைகளை தலைமை தாங்கினர் அவர்களை Muslim Rautara என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். வணிகம்தோல், அரிசி, இரும்பு, ரியல் எஸ்டேட், பாக்கு வணிகம்.ஈகை குணம்சமூக திருமணங்கள், உதவிகள்.
16ஆம் நூற்றாண்டு (1500-1599 CE)
வரலாறு பாளையக்கார்கள், ஜமீன்தார்களாகத் தொடர்ந்தனர். துருக்கிய கல்வெட்டுகள் தஞ்சை முதல் திருவாரூர் வரை கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த காலங்களில் காஞ்சிபுரம் செங்கபட்டு பகுதிகளில் இராவுத்தர்கள் அமர ஊர்களாக ஆட்சி செய்துள்ளனர், கொங்கு பகுதியில் பர்வத் இராவுத்தர் என்ற ஒரு சிற்றரசரும் வாழ்ந்துள்ளார், இதே காலத்தில் அமர கிராம நிர்வாகிகளான இராவுத்தர்கள் முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த வரலாறு கள்வெட்டாக உள்ளது. விஜயநகர நாயக்கர்களின் கீழ் நிர்வாகம். குதிரை வணிகம். ஈகை குணம், நிர்வாகப் பணிகளில் சிறப்புற்று இருந்தனர். இந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர் தான் புகழ்பெற்ற சூஃபி கவிஞரான சாமூர் வகையறாவை சேர்ந்த தென்காசி ராவுத்தர் சமூகத்தில் பிறந்த பீர் முகமது அவர்கள் அவர்களை "தக்கலை பீரப்பா" என்றும் அழைப்பர்.
17ஆம் நூற்றாண்டு (1600-1699 CE)
வரலாறு இராமநாதபுரம் அரசில் ஜமீன்தார்கள் பந்தலகுடி இளையான்குடி அபிராமம் போன்ற பகுதிகளை நிர்வகித்தவர்களும் ஜமீனாக இருந்தவர்கள் இராமநாதபுரத்தை பூர்விகம் கொண்ட இராவுத்தர்களே. ராவுத்தான் சேர்வைக்காரர் போன்ற உயர்போர் தரவரிசையில் தென் சீமைகளில் இடம்பெற்றனர். சேர்வை, அம்பலம் பட்டங்களை இராமநாதபுர அரசர் சேதுபதி அவர்களால் இராவுத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதே நவாப் படையிலும் வடக்கில் வட ஆற்காடு பகுதிகளில் வாழ்ந்த ராவுத்தர்கள் குதிரைப்படை வீரர்கள் சேர துவங்கினர்.
18ஆம் நூற்றாண்டு (1700-1799 CE)
வரலாற்றுகளில் ஜமீன்களாக நிலசுவந்தர்கள், தலைவர்களாகத் தொடர்ந்தனர். ஹைதர் அலி, திப்பு படைகளில் பெரும்படையாக குதிரை வீரர்களாக செயல்பட்டனர் (குறிப்பாக கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திண்டுக்கல்). சில பாளையக்காரர்களால் மத அடக்குமுறையும் இக்காலத்தில் நடந்துள்ளது அதனால் இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளது, கேரளா அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் சென்றவர்கள் உண்டு குறிப்பாக பாண்டியர் காலத்திற்கு பிறகு கோட்டயம், பத்தனம்திட்டா ராவுத்தர்கள் இவ்வாறு சென்றவர்கள் பலர். திருவிதாங்கூரில் நிர்வாகத்தில் பங்காற்றினர் அந்த அரசுக்கு ஆதரவாக போர்களில் பங்கு. ஏளக்காய், மிளகு, துணிகள், வெற்றிலை, புகையிலை போன்றவையின் நிறுவன வணிகங்கள். சமூக ஒருங்கிணைப்பு.
19ஆம் நூற்றாண்டு (1800-1899 CE)
வரலாறு தமிழ்நாட்டின் பெரிய முஸ்லிம் சமூகமாக இராவுத்தர்கள் உருவெடுத்தனர். பிரிட்டிஷ் ஆட்சியால் புதிய தொழில்கள். டியோபந்தி, பரேல்வி இயக்கங்கள் தொடர்பு. இக்காலத்தில் போர்மரபுகள் மங்கின. வரலாற்று குதிரை வீரத்தால் புகழ் இருந்தது. வணிகத்தில் ரத்தினக்கற்கள், தங்கம், துணிகள், நில உரிமையாளர்கள். சமூக தொண்டு. சந்தனக்கூடு திருவிழாக்கள்.
20ஆம் நூற்றாண்டு (1900-1999 CE)
வழக்கறிஞர்கள், தமிழ் புலவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என சமூகம் மாற துவங்கியது. சீர்திருத்தங்களால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு. பர்மா, மலேசியா வணிக இடம்பெயர்வு. முதல் பாதியில் லீக்கில் ஆதிக்கம் பிறகு திமுக/அதிமுக ஆதரவு. கிழக்காசிய நாடுகளில் வணிக ரீதியில் உலகப் போர்களில் மறைமுக பங்கு. திருமணங்களில் குதிரை ஊர்வலங்கள் மட்டும் கலாச்சார சின்னமாக மறையாமல் இருந்த டேட், விருந்தோம்பல், மளிகை, தோல் ஏற்றுமதி. சமூக பஞ்சாயத்துகள், கல்வி ஊக்கம் செலுத்த மதராஸ் மாகாண தமிழக மாவட்டங்கள் நகரங்களில் கல்லூரிகள் நிறுவப்பட்டன அப்படி உருவானதுதான் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, தேனி ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரி, சென்னை புதுக்கல்லூரி, நெல்லை சதகதுல்லா கல்லூரி, தஞ்சாவூர் காதர் முகைதீன் கல்லூரி, மதுரை வக்புஃபோர்ட் கல்லூரி போன்ற கல்லூரிகள்.
21ஆம் நூற்றாண்டு (2000-தற்போது வரை)
வரலாறு நீதித்துறை, பொழுதுபோக்கு, கல்வியில் முன்னேற்றம். பெண்கள் உயர் கல்வி, பள்ளிவாசல்கள் நிறுவுவது. உலகளாவிய புலம்பெயர்ந்தோர்: கேரளா, தென்கிழக்கு ஆசியா. ஹனஃபி சுன்னி நம்பிக்கை தொடர்கிறது. ராவுத்தர் நலச் சங்கங்கள் செயல்படுகின்றன. வணிகத்திறனில் முன்னேற்றம். வணிகமாக உணவு, கட்டுமானம், வியாபாரம். சமூக நலம், அரசியல் ஈடுபாடு என பரந்த சமூகமாக திகழ்கிறது.
(புகைப்படம்: பத்தொன்பதாம் நூற்றாண்டு மதராஸ் மாகாணத்தில் வரையப்பட்ட பிரபுத்துவ இராவுத்தர் முஸ்லிம்கள் ஓவியம்)